- ஸ்வர்ணலட்சுமி
ஈரோடு: ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் 28 வது கிலோமீட்டர் தொலைவில்,. ஈங்கூர் புகைவண்டி நிலையத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சென்னிமலை திருத்தலம் அமைந்துள்ளது. "சென்னிமலை" என்றாலே "தலைமையான மலை" என்று பொருள். இது மேருவின் ஒரு பகுதி என்பது ஐதீகம்.
சென்னிமலை என்ற மலையின் பெயராலே அதன் அடிவாரத்தில் உள்ள ஊரும் அழைக்கப்படுகிறது. மலையின் பரப்பு சுமார் 1700 ஏக்கரில் மலை உச்சி கடல் மட்டத்திற்கு மேல் 1749 அடி உயரம் அமைந்துள்ளது. இருப்பினும் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு செல்லும் பாதை மிகவும் செங்குத்தாக இல்லாமல் பக்தர்கள் யாவரும் எளிதில் ஏறி கோவிலுக்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இங்கு அமைந்துள்ள கோவில்கள்:

சென்னிமலையின் தென்புறம் இமயன் வழிபட்டசெவ்வந்தீஸ்வரர் கோவில், மலையின் கன்னி மூலையில் இந்திர விநாயகர் கோவில், ஊர் சிவன் கோயிலுக்கு மேற்கில் பெருமாள் கோவில்,வடமேற்கில் நர்த்தன விநாயகர் கோவில், துர்க்கை கோவில், ஈசான திக்கில் காமாட்சி அம்மை கோவில், அக்னி திசையில் மாரியம்மன் கோவில், தெற்கில் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் இந்த கோவில்களுக்கு எல்லாம் நடு நாயகமாக கைலாயநாதர் கோவில் அமைந்துள்ளது.
சென்னிமலை மேல் செல்லும் பாதையில் அடிவாரத்தில் இருப்பது மயில்வாகன கொறடு. இதை விஜயநகர மன்னர் கட்டினார் என்று கூறுவார்கள். இன்றும் இவ்விடத்தில் பக்தர்கள் முடி எடுத்து பிரார்த்தனை முடிக்க மலையேறும் பழக்கம் இருந்து வருகின்றது.
இங்கு அமைந்துள்ள இந்திர விநாயகர் கோவிலுக்கு மேற்கே ஒரு தெப்பக்குளம் படிகட்டுகளுடன் நாம் செல்லும் வழியில் காணலாம். இத்தீர்த்தம் "மார்க்கண்டேய தீர்த்தம்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவின் போது இத்திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது.
மலைக்கோவிலான சென்னிமலை திருத்தலமானது பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல வசதியாக 1320 திருப்படிகள் கொண்ட படி வழிப் பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல நாலு கிலோ மீட்டர் தூரமுள்ள தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு வசதியாக ஆங்காங்கே நிழல் தரும் மண்டபங்களும், குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அடிவாரத்தில் இருந்து இரண்டு பேருந்துகள் மலைக் கோவிலுக்கு செல்ல கட்டணம் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னி மலையில் தயிர் புளிப்பதில்லை என்பது தல ஐதீகம்.
பூஜை நேரம்:
மலைக்கோயில் ஆனதே காலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை சன்னதி நடை திறந்து வைத்து பக்தர்கள் வழிபாட்டிற்கு எந்தவித தடையும் இல்லாமல் பூஜை நடைபெறுகிறது.பிறகு இரவு 8:15 மணிக்கு சன்னதி நடை சாத்தப்படுகிறது என்று கூறுகின்றனர். தினசரி ஆறு கால பூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. இத்திருக்கோயிலில் ஸ்ரீ மார்க்கண்டேய கோத்திரத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களால் பூஜை மற்றும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் வீற்றியுள்ளார். தினசரி நடைபெறும் ஆறு கால பூஜைகளில் மூலவருக்கு நைவேத்திய பூஜைகள் முடிந்த பின்னர் சன்னதி விநாயகருக்கு பூஜைகள் செய்வது வழக்கம். ஏனெனில் முருகப்பெருமான் மாம்பழத்தின் பொருட்டு கோபித்து வந்து மலை மேல் வீற்றிருப்பதால் அவரை சாந்தப்படுத்தும் பொருட்டு தொன்று தொட்டு இவ்வாறு பூஜைகள் இன்றும் நடைபெற்று வருகிறது என்று கூறுகிறார்கள்.
சென்னிமலை ஆண்டவர் நான்கு யுகங்களில் மகாவிஷ்ணு,மகாலட்சுமி, துர்கா லக்ஷ்மி, தேவேந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டும்.நான்கு பெயர் கொண்ட மலையாகவும்,நான்கு விருட்சம், 4 தீர்த்தம், நான்கு மூர்த்தியாகவும் காட்சி அருளுகிறார்.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்.. உலகிலேயே மிக உயரமான.. 81 அடி உயர முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
நூல் பல கல் (சிறுகதை)
தானம் வீட்டிலிருந்து துவங்குகிறது!
பீகாரில் 10வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார்
20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்
சென்னிமலை திருக்கோயில்.. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரி கிரி கோவில்!
கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? வாடிக்கையாளர்களுக்கு சாதகமா? பாதகமா?
{{comments.comment}}