சென்னை: நிச்சயமாக 7வது முறையாக ஆட்சியமைத்து ஏற்றம் காணும் அரசாக திமுக அரசு அரசமைக்க போகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6வது நாளாக நடைபெறும் சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். தனது பேச்சின் தொடக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:
சட்டமன்றத்தின் மாண்பையும், மக்களின் எண்ணங்களையும் மதிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததன் வாயிலாக தான் வகிக்கும் பதவிக்கும், பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படும் காரியத்தை அரசியல் உள்நோக்குடன் ஆளுநர் செய்தது இந்த மன்றம் இதுவரை காணாதது. இனியும் இதனை காணக் கூடாது.
அவர் எங்களை புறக்கணிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏன் என்றால் திராவிட இயக்கமே புறக்கணிப்புக்கும் அவமானத்திற்கும் எதிராக உதயமானது தான். சமூக சீர்திருத்த இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய வரலாறு திமுகவுக்கு தான் உண்டு. நிச்சயமாக ஏழாவது முறையாக ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திமுக அரசு அமையப்போகிறது.
ஆறாவது முறையாக ஆட்சி அமைத்த போது இது விடியல் ஆட்சியாக அமையும் என்று கூறினோம். இருட்டில் கிடக்கும் எதிர்கட்சிகள் விடியல் எங்கே என்று கேட்கிறார்கள். விடியல் கொடுப்போம் என்று சொன்னது மக்களுக்கு தானே தவிர எதிர்கட்சிகளுக்கு அல்ல. விடியலைக் கண்டால் அவர்களுக்கு கண்கள் கூசத்தானே செய்யும்.
நான் செல்லும் இடமெல்லாம் கூடும் மக்களின் எழுச்சி தான் விடியலின் அடையாளம். விடியல் பயணம் மகளிர் சேமிப்பை அதிகரித்து உள்ளது. மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை பெரும் மகளிரின் முகங்களை பாருங்கள் அது தான் விடியல் ஆட்சி. அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி செல்ல முடியாத மாணவிகளுக்காக கொண்டுவரப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம். இந்த புதுமைப்பெண் திட்ட மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தை விரிவு படுத்தி உள்ளோம். தமிழ்நாட்டு மாணவிகள் என்னை அப்பா அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றேன். புதுமைப்பெண் திட்ட மூலம் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தை விரிவு படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து
நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!
வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?
Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!
Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!
{{comments.comment}}