சென்னை: விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் திரும்பியபோது, உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

நேற்று சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு தேவையான நிர்வாக ரீதியில் ஆன ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கிய துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிக மிக அதிக அளவில் மக்கள் வந்து இருந்ததால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்த முறை இது போன்ற பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.
இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவ காரணங்களால் ஐந்து விலை மதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மனவேதனையும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
அந்தக் காலத்துல பிள்ளைகள் அப்படி இருந்தாங்க.. இப்போ எப்படி இருக்காங்க?
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
{{comments.comment}}