சென்னை: விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும். திமுக ஆட்சியில் மகளிருக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று முதல்னர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது இதில் சேருவதற்கு பதிவு செய்து கொண்ட மாணவிகளுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:

பெரியார் என்ன கனவு கண்டிருந்தாரோ, எதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அந்த எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றும் வகையில் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். புத்தாண்டு பிறந்து நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது, மிகவும் மகிழ்ச்சி. பெண்கள் உரிமை முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றவே திமுக உருவாக்கப்பட்டது.
அரசு பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சொத்துகளில் பெண்களுக்கு சமஉரிமை அளித்தது திமுக அரசு. திமுகவின் கொள்கைகளில் பாலின சமத்துவம் மிக முக்கியமானது. பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் நாம் திட்டங்களை தீட்டி வருகிறோம்.
விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும். திமுக ஆட்சியில் மகளிருக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் 2000 பெண்களுக்கு டேலி (TALLY) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அத்தே.. அத்தே...!
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!
சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இங்கே வா வா (மழலையர் பாடல்)
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
நான் விரும்பும் வகுப்பறை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 22, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்
{{comments.comment}}