சென்னையில் அண்ணா.. மதுரையில் கலைஞர்.. கோவையில் பெரியார்.. இது அறிவியக்கம்.. முதல்வர் ஸ்டாலின்

Nov 06, 2024,05:35 PM IST

சென்னை: சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம். திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார்.


கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 




நிகழ்ச்சியின்போது அவர் பேசுகையில், கோவையில் தான் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்றைய தினம் நூலக அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன். 2021ம் ஆண்டு ஆட்சிபெருப்பேற்ற உடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். கோவையில் மட்டும் 3 முறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கேன்.


இந்தாண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்த பிறகு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகள் நிலை குறித்து அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் ஆய்வு செய்ய சொல்லியிருந்தேன். அது சம்மந்தமாக ஆய்வு நடத்தி வருகிறேன். அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த செந்தில் பாலாஜி கம் பேக் கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜி சிறப்பாக அரசு திட்டங்களை செயல்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. கோவை மக்களுக்காக திமுக ஆட்சி திட்டங்களை பார்த்து பார்த்து தீட்டி வருகிறது.


தங்களுக்கு வாக்களிக்க மனம் இல்லாதவர்களுக்கும் சேர்த்தே திமுக அரசு பணியாற்றி வருகிறது. இதனை உணர்ந்த மக்கள் திமுகவிற்கான ஆதரவை அதிகரித்து வருகின்றனர்.இந்தியாவில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் 20 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் உள்ளது. அனைத்து துறைகளிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலை  பெற்றதற்கு, லட்சியக் கொள்கை கொண்ட அரசு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் போட்ட பதிவில், சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம். திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா

news

தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

news

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!

news

TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!

news

அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்

news

அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்