சென்னை: திமுகவை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட சிந்தனைகளின் வேராக விளங்கும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று திராவிட மாடல் அரசு, சமூகநீதி நாள் என பெயர்சூட்டி ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
 1.jpg)
அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாக இருப்பவைகளை அழித்திட வேண்டும் என்றார் தந்தை பெரியார்!
நமது திராவிட மாடல் அரசால், சமூகநீதி நாள் -எனக் கடைப்பிடிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாளில், இந்தியாவின் வளர்ச்சிக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் பெரும் தடையாக இருந்து வரும் சாதிய ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைவரையும் சமமாக நடத்தி, அனைத்துத் தரப்பினரும் சமவாய்ப்புகள் பெற்ற சமூகமாகத் திகழத் தமிழ்நாடெங்கும் உறுதிமொழி எடுக்கப்பட்டது!
என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்! என்றார் பேரறிஞர் அண்ணா!
புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க என்று வளர்ந்திருக்கிறோம்!
ஓரணியில் தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்! என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}