எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Dec 18, 2025,09:17 PM IST

சென்னை: ஒரு ஆணின் வெற்றிக்கு பின் பெண்கள் தான் உள்ளனர். எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 15 கோடிகளுக்கான திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் பேசுகையில்,  கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி வந்துவிடுகிறது. கொளத்தூர் என்று பெயர் சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள். கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் செய்து விட்டோம், மற்ற தொகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று நினைக்க வேண்டாம். எல்லா தொகுதியும் நம்முடைய தொகுதி தான்.


10 நாளைக்கு ஒருமுறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் தான் எனக்கு முழு திருப்தி ஏற்படுகிறது. முதலமைச்சராக இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மகிழ்ச்சியை காட்டிலும் கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகம்.




மேலும் ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பார்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் என் மனைவி துர்கா உள்ளார். என் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த பொழுது என் மனைவி என்னை விட்டுச் சென்று இருந்தால் என்னவாகி இருக்கும்?  பல்வேறு இன்னல்களை சந்தித்தும் என்னை ஊக்கப்படுத்தி வருவதால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதனால் மனைவி சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!

news

தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?

news

இந்தக் காதலை மட்டும்...கட்டுப்படுத்த முடியலையே!

news

உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்