மறுபடியும் முதல்ல இருந்தா?.. சீனாவை உலுக்கும் நிமோனியா வைரஸ்.. அலர்ட் ஆகும் இந்தியா!

Nov 24, 2023,05:51 PM IST

- மஞ்சுளா தேவி


டெல்லி: கொரோனா பரவலைப் போலவே தற்போது சீனாவில் நிமோனியா காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அது இந்தியாவுக்கும் பரவுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், எந்த சவாலையும் சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


உலக சுகாதாரத்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாக உள்ளதாகவும், அதனால் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளது. மேலும் சீனாவில் பரவும் புதிய தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.


இருப்பினும் இந்தியா இப்போதே இதுதொடர்பாக அலர்ட் ஆக ஆரம்பித்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே இன்ஃப்ளுன்சா பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான தடுப்பு வழிமுறைகளையும் எப்படி செயல்படுத்துவது என்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை  மத்திய சுகாதார துறை நடத்தி வருகிறது. 


வட சீனாவில் கடந்த ஒரு மாதமாக சுவாசக் கோளாறுகளால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். அதிக உடல் வெப்பம்,  சுவாச பிரச்சனை .. ஆனால் இருமல் இல்லை. இது என்ன வைரஸ் என கண்டறிந்த போது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நிமோனியா வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதிக்க கூடியதாக உள்ளது தெரிய வந்தது.


நிமோனியா வைரஸ் என்றால் என்ன




பூஞ்சை மற்றும் பாக்டீரியா வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சுவாச நோய். முதலில் இந்த நோய் நுரையீரல் செல்களில் அலர்ஜியை ஏற்படுத்தும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் நிமோனியாவால் பாதிக்கப்படுவர்.


அறிகுறிகள் என்ன?


1.சுவாசித்தலில் தடை .

2.சுவாசிப்பதில் சிரமம்

3.இதயத்துடிப்பு அதிகரித்தல்

4.காய்ச்சல்

5.குளிர்ச்சி மட்டும் அதிக வியர்வை

6.இருமல்


இந்த நிமோனியா வைரஸ் சீனாவில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனையில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில்  பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் புதிய தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு சீன அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்கும். அதுபோலவே நிமோனியா வைரஸும் நுரையீரலை தாக்குகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக நிமோனியா வைரசாலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களே கவனமுடன் இருங்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் செல்லுங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்