டில்லி : இந்தியாவில் HMPV வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக HMPV வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசுடன் நிமோனியா, இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ்களும் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் பலரும் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இந்த வைரஸ் 2021ம் ஆண்டு முதலே இருந்து வருவதாகவும், இது ஒன்றும் புதியது கிடையாது என சொல்லப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் பரவி வந்த HMPV வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் நாடு முழுவதும் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மற்றொரு குழந்தைக்கும் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றிற்கும் HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் சோதனை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிடைக்கும் என்றும், அதே போல் குழந்தைகளுக்கான சிகிச்சை கிட்களும் விரைவில் அரசு சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!
Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!
Sudha Thirunarayanan Cute Story: கோலம்!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
{{comments.comment}}