சென்னை: இளம் நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டதும் அதைப்பகிர்வதும் ஆண்கள் தானே. பெண்ணிடம் பாலியல் தேவைகளைக் கேட்கும் அருவருப்பான ஆண்களைப் பற்றி யாரும் பேசவில்லை. இப்படிபட்டவர்கள் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை டிவியில் சின்னத்திரை தொடரில் நடித்து வரும் இளம் நடிகையொருவர் சினிமா வாய்ப்புக்காக ஒரு நபரிடம் அந்தரங்கமாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. இது சமூக வலைதளங்களிலும் பரவி வைரலாகியது. இந்த சம்பவத்திற்கு பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
இளம் நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டதும் அதைப்பகிர்வதும் ஆண்கள் தானே. பெண்ணிடம் பாலியல் தேவைகளைக் கேட்கும் அருவருப்பான ஆண்களைப் பற்றி யாரும் பேசவில்லை. இப்படிபட்டவர்கள் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

பெண் சமரசம் செய்யாததால் வேலையை இழந்திருக்கலாம் என்று இப்போது ஆண்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் அது நியாயமான கருத்து, நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தன்னிடம் வேலை செய்யும் பெண்ணிடம் பாலியல் தேவைகளைக் கேட்கும் அந்த அருவருப்பான மனிதனைப் பற்றி யாருமே பேசவில்லை. இப்படியானவர்கள் தொடர்ச்சியாக இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஆண்கள் விரும்பினால், வெளிப்படையாக விபச்சார புரோக்கர்களாக மாற வேண்டும். இந்த நாட்டில் அதற்கு பஞ்சமில்லை. ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இங்கு பெண்களும் சிறுமிகளும் வெளிப்படையாகவே வியாபாரத்திற்கு கடத்தப்படுகிறார்கள். விநியோகிக்கப்படுகிறார்கள், சத்தமின்றி கொல்லப்படுகிறார்கள். அவர்களின் உடல்களை அருகே உள்ள மரங்களில் தொங்க விடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் ஒரு சிறுமி தொங்கவிடப்பட்டது போல.
இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்ட ஆண்கள் கலை, தொலைக்காட்சி, ஊடகம் மற்றும் திரைப்படங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கின்றேன். இதனால் கலையை சமூகத்திற்கு நம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவலாம்.
நடிகைகளிடம் பாலியல் உதவிகளை கேட்ட ஆண்கள் தங்கள் குடும்பங்களுக்குள் மரியாதைக்குரிய இடங்களில் இருக்கின்றனாரா? அவர்களின் மனைவி, தாய், சகோதரி மற்றும் மகளிடம் எப்படி நடந்து கொள்கின்றனர்?.
இப்படியான ஆண்களுக்கு வசீகரம், தைரியம், அறிவு, திறமை அறிவு திறமை என எதுவும் இல்லாமல் பெண்களை மோசமாக நடத்த முடியும். நான் கூறுவது அப்படிப்பட்ட பிரயோஜனம் இல்லாத ஆண் என்பவன் தோல்வி அடைந்தவன். அவர்களை நினைத்து வருந்துகிறேன். அந்த வீடியோவுக்கு பின்னால் இருந்த ஆண்கள் யார்?
ஒரு இழிமகன் எடுத்த வீடியோவையும் அதற்கான லிங்க்கையும் பல இழிமகன்கள் கேட்டுக்கொண்விருக்கிறார்களா? பெண்ணியம் பேசும் முற்போக்கு நாட்டில் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாசமாக போங்க. அழிஞ்சு போங்க. உங்களை இப்படி வளர்த்தவங்களோட கட்டைல போங்க என மிகக் கடுமையாகத் தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}