தெரியாமல் விமானக் கதவைத் திறந்து விட்டார் தேஜஸ்வி சூர்யா.. அமைச்சர் விளக்கம்

Jan 19, 2023,09:04 AM IST

டெல்லி: தவறுதலாக விமானத்தின் அவசர கால கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்து விட்டார். இதற்காக மன்னிப்பு கேட்டு கடிதமும் கொடுத்து விட்டார் என்று கூறியுள்ளார் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா.


டிசம்பர் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி சென்ற இன்டிகோ விமானத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா பயணம் செய்தார். விமானம் கிளம்புவதற்கு ஆயத்தமாகி வந்த நிலையில், விமானத்தின் அவசர காலக் கதவை அவர் திறந்து விட்டார். இதை அங்கிருந்த சக பயணிகள் பார்த்துள்ளனர். 


ஆனால் இந்த விவகாரம் வெளியில் வரவில்லை. யாரும் இதைப் பற்றி சொல்லவில்லை. இந்த நிலையில்  தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வியின் பெயரைக் குறிப்பிடாமல் அவசர கால கதவைத் திறந்து விளையாடியவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது அப்படியே விடப்பட்டு விட்டது.


சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது ஒரு தொழிலதிபர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரிதாகி அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தேஜஸ்வி விவகாரத்தை ஆங்கில ஊடகங்கள் சில பெரிய அளவில் செய்தியாக்கின. இதனால் தேசிய  அளவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரணைக்கு விமான நிலைய ஆணையரகம் உத்தரவிட்டது.  ஆனால் இன்டிகோ நிறுவனம், தெரியாமல்  கை பட்டு, கதவைத் திறந்து விட்டார் தேஜஸ்வி. மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் விவகாரம் அத்துடன் முடிக்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தது.


இப்படி விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சிந்தியா விளக்குகையில், மிகுந்த கவனத்துடன் இது அணுகப்பட வேண்டும். இதை சிக்கலாக்க முயற்சிக்கக் கூடாது. தெரியாமல், தவறுதலாக கதவு திறக்கப்பட்டு விட்டது. அதுகுறித்து அவரே விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து முறையாக அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்ட பின்னரே விமானம் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார் என்றார் சிந்தியா.


ஆனால் இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் விவாதித்து வருகின்றன. மிகப் பெரிய அச்சுறுத்தல் தரக் கூடிய செயலை தேஜஸ்வி செய்துள்ளார். அவரை சர்வ சாதாரணாக மன்னிப்புடன் விடுவதா.. இதையே சாதாரணமானவர்கள் செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா இல்லையா என்று அவர்கள் கேட்கிறார்கள்.


இன்டிகோ நிறுவனத்தால் இந்த விவகாரம் வெளியில் வராமல் மறைக்கப்பட்ட நிலையில் தற்போது இது வெடிகுண்டு போல வெடித்த நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தி விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்

news

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?

news

நேர்மையின் அடையாளம் சகாயம்.. அவரது பாதுகாப்பை உறுதி செய்க.. முதல்வருக்கு சீமான் கோரிக்கை!

news

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!

news

வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!

news

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம்.. திரையுலகினர் அஞ்சலி

news

Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!

news

டாப்ஸ்லிப் மலைப்பகுதியில்.. மலையேற்றத்தின் போது கேரளாவை சேர்ந்த மருத்துவர் உயிரிழப்பு..!

news

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி.. டிரம்ப் அதிரடி.. இந்தியப் படங்களுக்கு பாதிப்பு வருமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்