புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளகளில் வகுப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
புதுச்சேரி பள்ளிகளின் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி 7வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் இனி நடப்பு ஆண்டு முதல் 8 பீரியடுகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 9 மணி முதல் 9.15 அசெம்பிளி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் முதல் பாட வேளை காலை 9.15 மணி முதல் 10.00 மணி வரையும், இரண்டாவது பாட வேளை 10 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். 10.45 முதல் 10.55மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படுகிறது. அடுத்ததாக காலை 10.55 முதல் 11.40 வரை மூன்றாவது பாடவேளையும், 11.40 முதல் 12.25 வரை நான்காவது பாட வேளையும் நடைபெறும். அதன்பின்னர் மதியம் உணவு இடைவேளையாக 12.25 முதல் 1.30 வரை ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.30 முதல் 2.10 மணி வரை ஐந்தாவது பாட வேளையும், 2.10 மணி முதல் 2.50 வரை 6வது பாடவேளையும் நடைபெறும். இதற்கு அடுத்ததாக 2.50 முதல் 3 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழக்கப்படும். மதியம் 3 மணி முதல் 3.40 வரை 7வது பாட வேளையும், 3.40 முதல் 4.20 வரை 8வது பாட வேளையும் நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே வேளையில் காலை நேரத்தில் ஒரு பாட நேரம் 45 நிமிடமாகவும், மதியத்துக்கு பிறகு 40 நிமிடமாகவும் பாடவேளை நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் கூடுதலாக பாடங்களை கற்கும் வகையில் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இனி அரசுப்பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20க்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம். இன்று முதல் அமலுக்கு வருகிறது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}