சேலம்: கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 27 வருடங்களுக்குப் பிறகு கொண்டாடும் திருவிழா என்பதால் சுத்துப்பட்டியில் உள்ள 18 கிராமங்கள் மக்களும் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, நேற்று சாமி திருக்கல்யாண உற்சவத்திற்காக சீர் வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் திருக்கல்யாணத்திற்காக சீர்வரிசையை சுமந்தபடி சென்றபோது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, பைக்கில் எடுத்துவரப்பட்ட
பட்டாசுகளும் திடிரென வெடித்து சிதறின. இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ்( 29), தமிழ்ச்செல்வன் ( 11), கார்த்தி (11), லோகேஷ் (20), ஆகியோர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பைக்கில் வைத்து நாட்டு வெடியை கொண்டு சென்ற போது, சாலையில் வெடித்த பட்டாசுகளிலிருந்து தீப்பொறி பட்டதில் நாட்டு வெடி சிதறியதாக தெரியவந்துள்ளது. சேலத்தில் கோவில் திருவிழாவிற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கோயில் திருவிழாவின்போது பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் நிதி வழங்கப்படும் எனவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதல் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}