ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jan 20, 2026,05:14 PM IST

சென்னை: ஆளுநர் ஆர். என். ரவி. ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஒரு உரையை வாசித்தார். அப்போது உரையை வாசிக்காமல் ஆளுநர் இப்படி முரண்டு பிடிப்பது நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டார்.


ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய நிலையில் முதல்வர் எழுந்து ஒரு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், மீண்டும் ஒருமுறை மான்புமிகு ஆளுநர் அவர்கள் சட்டவிதிகளையும் மரபுகளை மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியேறியுள்ளார். ஆளநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாக உருவாக்கப்பட்ட உரையில், இதில் ஆளுநர் தனது சொந்த கருத்துக்களை தெரிவிப்பதற்கோ நீக்கம் செய்வதற்கோ அதில் இடமில்லை. அரசமைப்பு சட்டம் 176ல் அதற்கான வழிவகை செய்யப்படவில்லை. 


இருப்பினும் நாம் அவர் அவ்வாறு சில விளக்கங்களை குறிப்பிட்டு நேற்று அரசுக்கு கடிதம் எழுதி தொடர்ந்து அவருக்கு அதற்கான பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மான்புமிகு ஆளுநர் அவர்கள் வேண்டும என்றே அரசமைப்பு சட்டத்தை மீறிய ஒரு செயலை செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை அதன் மாட்சிமையை அவமதிக்கும் செயலாகும் என்று நான் கருதுகிறேன். 




10.4.2023 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை நான் இங்கே நினைவு கூற விரும்புகிறேன். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய போதிலும் அதை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழிமொழிந்த போதிலும் அந்த பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியை பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மி அளவும் விலகியதில்லை. இந்த அரசும் தவறியதில்லை என்று அன்றைக்கு நான் எடுத்துரைத்தேன்.


அந்த கொள்கை ஒட்டியே நான் ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க ஆணையிட்டேன். எனினும் மான்மிகு ஆளுநர் அவர்கள் ஏற்கனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. 


தமிழ்நாடு சட்டமன்றம் எட்டரை கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக உண்மையை பேசுபவராக இருக்க வேண்டும். மக்களுடைய பேராதரவோடு பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசமைப்பு சட்டமும் அந்த பதவி வகிப்பவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நம்முடைய ஆளுநர் அவர்கள் அதற்கு மாறாக செயல்படுகிறார்.


மாநில நிர்வாகத்தை முடக்கவும் பொது மேடைகளில் அரசியல் பிசையும் அவதரு பரப்பி வருகிறார். அது அவர் சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும் அத்தகை ஒரு முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையது அல்ல. நூற்றாண்டு விழா கொண்டாடி சீரும் சிறப்போடு இயங்குகின்ற பேரவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தினை பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வரலாற்று பெருமை கொண்ட பேரவையின் மான்பினை பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால் கீழ்காணும் தீர்மானத்தை பேரவை தலைவரின் இசைவோடு சட்டமன்ற பேரவை விதி 17ஐ தளர்த்தி முன்வழிந்திட அனுமதி கோருகிறேன் என்று கூறினார். அதைத் தொடர்ந்து தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்தார்.


தீர்மான விவரம்:




ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் மான்புமிகு ஆளுநர் அவர்கள் சென்றதை இப்பேரவை ஏற்கவில்லை.


மான்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே மான்புமிகு ஆளுநரால் படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது. அவ்வாறு அவை குறிப்பில் நடவடிக்கை குறிப்புக்கள் இடம்பெறலாம். மேலும் மரபுவழி நிகழ்வுகள், மான்புமிகு பேரவைத் தலைவரால் படிக்கப்படவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம் அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கை குறிப்பில் இடம்பெறலாம் எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன். இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டி அமைகிறேன் என்று கூறினார்.


இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசும்போது, இந்த சட்டமன்றத்தின் மாண்பைக் காத்து இன்றைய தீர்மானத்தை நிறைவேற்றி தந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும் அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் முரண்டு பிடிப்பதும் தொடர்ந்து வருவது நல்லதுல்ல.


ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது ஒரு நாள் செய்தியாக இதனை கடந்துவிட முடியாது என்று குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்