சென்னை: தமிழ்நாடு சட்டசபையையும், தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் ஆளுநர் தொடர்ந்து அவமதித்து வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை இன்று பரபரப்பான காட்சிகளை சந்தித்தது. இன்று காலை சட்டசபை கூடியதும் அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு பெரும் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை அவைக் காவலர்களை வைத்து சபாநாயகர் அப்பாவு வெளியேற்றினார்.
மறுபக்கம், ஆளுநர் ஆர். என். ரவி ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்று கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தினார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 3வது வருடமாக ஆளுநர் உரை சமயத்தில் ஆளுநர் இதுபோல செயல்பட்டது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் வெளியேறியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர். என். ரவி.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
தலைவலிக்குதுடா, தலை வலிக்குதே.. கவலையே படாதீங்க.. சூப்பர் பாம் இருக்கு.. வீட்டிலேயே தயாரிக்கலாம்!
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்.. விளக்கேற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
யெஸ் வங்கி கடன் மோசடி ...அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}