சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களையும் சிறப்பு அதிகாரம் மூலம், ஆளுநரின் கையெழுத்து இல்லாமலேயே உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய இந்தத் தீர்ப்பு நாடு தழுவிய அளவில் ஆளுநர் -மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வரும் மிகப் பெரிய பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது. இதுதொடர்பான அரசு கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது. இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுக்களை முதல்வரே நியமிக்க முடியும். யுஜிசி பிரதிநிதியை இதில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக வருகிற 16ம் தேதி துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது உயர் கல்வி மேம்பாடு தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களின் மேம்பாடு குறித்தும் முக்கிய ஆலோசனைகளை முதல்வர் மேற்கொள்ளவுள்ளார்.
தோளோடு தோள் சேர்ந்து நடப்போம்.. Balancing Relationship Is An Art
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்
{{comments.comment}}