- சுமதி சிவக்குமார்
சென்னை: தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.ஆர்.சுகுமார், கலைஞர் எழுதுகோல் விருதினைப் பெற்றுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கிக் கெளரவித்தார்.
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. முதல் விருதை மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் பெற்றார். 2022ல் வி.என்.சாமி, 2023ல் நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
2024ம் ஆண்டுக்கான விருது தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்.சுகுமார் பெற்றார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை டி.வி.ஆர் சுகுமாருக்கு வழங்கிக் கெளரவித்தார். இதழியல் துறையில் 50 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சுகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்., தமிழ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}