"பெண் சூரியன்" நிகர்ஷாஜி.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து.. பெருமிதம்!

Sep 04, 2023,10:20 AM IST
சென்னை:  ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர்ஷாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தும், பெருமிதமும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த நிகர்ஷாஜி ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக செயல்பட்டுள்ளார். ஆதித்யா எல் 1 விண்கலம் சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்நிகர்ஷாஜிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நிகர்ஷாஜி தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, முதல்வர் மு .க ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.



தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான #AdityaL1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி #NigarShaji அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து #Chandrayaan முதல் #Aditya வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். 

இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து தான் ஆய்வு செய்யவுள்ள லாக்ரேஞ்ச் 1 பகுதியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. ஐந்து வருடம் தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளவுள்ளது ஆதித்யா எல் 1 விண்கலம். 

இதன் திட்ட இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் செங்கோட்டையில் பிறந்தவரான நிகர் ஷாஜி. செங்கோட்டை அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர் இவர்.  இஸ்ரோவின் முக்கியத் திட்டங்களான சந்திராயன் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளே திட்ட இயக்குநர்களாக இருந்தனர். அதேபோல  ஆதித்யா எல் 1 திட்டத்துக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே திட்ட இயக்குநராக இருந்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. அதிமுக அதிரடி வேகம்.. விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்