சென்னை: தென் மேற்குப் பருவ மழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நீலகிரி, கோயம்பத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூர், ஆகிய நான்கு தாலுகாவுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதுமலையிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வந்த வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரவேண்டாம் என நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் விட்டுவிட்டு பெய்யும் தொடர் கனமழை எதிரொலியாக முதுமலை புலிகள் காப்பகம் மூன்று நாட்கள் மூடப்படுவ தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான கன மழை பெய்ய கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு இன்று எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கனமழை காலங்களில் மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசணை மேற்கொண்டு வருகிறார். நிவராணப் பணிகளை முடுக்கி விடுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}