சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடலூரில் இன்றும் நாளையும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் தோறும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை கோவை, விருதுநகர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக திமுக சார்பில் திட்டமிட்டுப்பட்டுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே விழுப்புரத்தில் நடைமுறைப்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 4,50,134 பேரும், விடியல் திட்டத்தில் 18 கோடியே 60 லட்சத்து 63ஆயிரத்து,302 பேரும், புதுமைப்பெண் திட்டத்தில் 13 ஆயிரத்து 18 பேரும், தமிழ் புதல்வன் திட்டத்தில் 13,514 பேரும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 63,662 தொடக்கப்பள்ளி மாணவர்களும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 1500 குடும்பங்களும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 20 லட்சத்து 86 ஆயிரத்து 173 பேரும் பயனடைந்து உள்ளனர். மேலும், இத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேருகிறதா என்பது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள இன்றும் நாளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார்.
இதற்காக, சென்னையில் இருந்து இன்று காலை சாலை மார்க்கமாக கடலூர் மஞ்சக்குப்பம் செல்லும் அவர், அரசு சார்பில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 30,000 க்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் நெய்வேலியில் ரோடு ஷோவை முடித்துக் கொண்டு மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்கிறார். இதில் மாற்று கட்சியினர் 5000 பேர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
பின்னர் இரவு அரசினர் மாளிகையில் தங்கிவிட்டு மீண்டும் நாளை வேட்பூரில் நடைபெறும் பெற்றோரை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அப்போது முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இருக்கிறார்.
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
{{comments.comment}}