காலை உணவுத் திட்டம்.. கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Aug 25, 2023,09:42 AM IST
நாகப்பட்டனம்: விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை நாகப்பட்டனம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருக்குவளை அரசு நடுநிலைப் பள்ளியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து அவரும் சாப்பிட்டார். இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ்நாடு அரசு சார்பில் நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும இருந்து வந்த இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு முழுவதுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைத்தரா். 4 நாட்கள் சுற்றுப்பயணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் முதல்வர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருக்குவளை அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.



முதலில் மாணவர்கள் சிலருக்கு அவரே உணவு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். தனக்கு அருகே இருந்த சிறுமியிடம் உன் பெயர் என்ன, நான் யார்னு தெரியுமா.. சாப்பாடு நல்லாருக்கா.. என்ன படிக்கிறே என்று கேட்க அந்த சிறுமியும் ஆவலுடன் பதிலளித்தார்.

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலமாக 17 லட்சம் மாணவ, மாணவியர் பலனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்