சென்னை: மாநில சுயாட்சிக் குழு ஏன் தேவை என்பது குறித்து விளக்கம் அளித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், மத்திய மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்ததன் மூலம்,
மாநில சுயாட்சி பற்றிய கேள்விகள் மீண்டும் எழுந்து வருகிறது.
இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது, ஏன் தேவை மாநில சுயாட்சி குழு என்று சிலர் கேட்கிறார்கள்.... அதற்கான காரணங்களையும் - தேவைகளையும்
தினத்தந்தி
நாளேட்டில் கட்டுரையாகப் பகிர்ந்துள்ளேன். அக்கட்டுரையை வெளியிட்ட அவர்களுக்கு நன்றி! உங்களது வாசிப்பிற்காக அதன் முக்கியக் கருத்துகளை இங்கேயும் பகிர்கிறேன்.
இந்திய நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்று தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது திமுகவின் அடிப்படைக் கொள்கை. அந்த முழக்கத்தை வென்றெடுக்க நீதிபதி ராஜமன்னார் குழுவை தலைவர் கலைஞர் அமைத்தார். அதே இலக்கில்தான் நீதியரசர் குரியன் ஜோசப்பை தலைவராகவும், அசோக் வரதன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன், ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். தலைவர் கலைஞர் அவர்கள் குரல் எழுப்பிய காலத்தை விட இன்றைய காலம் மிக மிக மோசமான காலமாகும். இன்றைய ஒன்றிய பாஜக ஆட்சியானது மாநில அரசுகளை முடக்கப்பார்க்கிறது. மாநிலங்களின் மொழி, கலாச்சாரங்களை அழிக்கப் பார்க்கிறது. மாநிலங்களின் உரிமைகளை சிதைக்கப் பார்க்கிறது. மாநில அரசுகளை அதிகாரமற்றவைகளாக மாற்றி அதனை சட்டம் இயற்றும் தகுதி அற்றவைகளாக தகுதியைக் குறைத்து சொன்னதைச் செய்யும் கிளிப்பிளையாக மாற்ற நினைக்கிறது..
பல மாநில அரசுகள் ஒன்றிய அரசை நோக்கி பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கும் காட்சியைத் தான் பார்க்கிறோம். ஒரு மாநிலத்துக்கு நிதி உரிமையே ஆக்ஸிஜனாக இருக்கிறது. இதனை பறிப்பது மூச்சற்ற நிலையை உருவாக்குவதே ஆகும். கடத்த பத்து ஆண்டுகளாக ஒத்திசைவு பட்டியல் அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசின் அதிகாரங்களாக மாற்றிக் கொண்டு விட்டார்கள். மாநில பட்டியல் என்பதை மதிப்பதே இல்லை. அதில் இருக்கும் பொருள்கள் குறித்தும் அவர்களே சத்தமில்லாமல் சட்டம் இயற்றி கொள்கிறார்கள். NEP ஏழை எளிய மக்களை கல்வி சாலைகளில் இருந்து துரத்தும் கல்வி முறை. NEET ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைப்பதாக இருக்கிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழிக் கொள்கையாகவே மாற்றி விடுவார்கள். இது ஹிந்தி பேசாத மக்களை இந்திய நாட்டில் இரண்டாம் தர மக்களாக மாற்றும் சூழ்ச்சி.
மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறி உள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாகத் தரப்படுவதில்லை. நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு அளிக்கப்படுகின்றது. இதன் உச்சகட்டமாக தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க சதி செய்கிறார்கள். நமக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவும், எரிச்சல் ஏற்படுத்தவுமே ஆளுநர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் ஆளுநர் செயலை சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அவர் திருந்தவில்லை. திருந்த மாட்டார். ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும். இந்தியா வலிமை பெற மாநிலங்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் ஆட்சி செலுத்தி வளர்ச்சியை அடைந்தாக வேண்டும். வளர்ச்சியான மாற்றங்களே வலிமையான இந்தியாவை உருவாக்கும்.
நாம் எந்த பிரிவினை எண்ணத்தோடும் மாநில சுயாட்சிக் குழுவை அமைக்கவில்லை. ஒன்றிய அரசின் சார்பில் 1983 ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையம், 2007 ஆம் ஆண்டில் நீதிபதி பூஞ்சி ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டது. மாநில சுயாட்சி என்பது ஒன்றிய ஆட்சியாளர்களாலும் பல்வேறு காலகட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட உன்னதமான கருத்தே ஆகும்.
எனவே, யாரும் தேவையற்ற பீதியைக் கிளப்பத் தேவை இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை காணவே மாநில சுயாட்சி மாநில சுயாட்சிக்காக அனைவரும் முழங்குவோம்.வளமும் வளர்ச்சியும் பெற்ற மாநிலங்களின் மூலமாக கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}