சென்னை : தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து தனக்கே தகவல் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார். பல நாட்கள் அங்கு தங்கவுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான சந்திப்புகளில் அவர் பங்கேற்கிறார். நீண்ட நாட்கள் அவர் அமெரிக்காவில் தங்கவுள்ளதால் அவர் வரும் வரை அவரது முதல்வர் பொறுப்பை யாரிடமாவது கொடுக்க வேண்டும். இதையும் மனதில் வைத்து மேலும் சில அமைச்சர்களை மாற்றும் வகையில் அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று வெளியான தகவலின் படி, ஒரு மூத்த அமைச்சர் மற்றும் 2 அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக மூன்று புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகவும் தகவல் கூறுகின்றன. சிலரது இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று முதல்வரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்கு முதல்வர் சிரித்துக் கொண்டே, எனக்கு தகவல் வரலை என்று அதிரடியாக கூறினார்.
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை மாநில அரசுதான் நடத்தியதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியது குறித்த கேள்விக்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நிகழ்வை மாநில அரசு நடத்தியதாக விளக்கம் அளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}