சட்டம்ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. அதனால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் வருகின்றன.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jan 31, 2025,06:53 PM IST

சென்னை: ஆளுநர் அனைத்து விவகாரங்களிலுமே அரசுக்குப் பிரச்சினை செய்து கொண்டுதான் உள்ளார். ஆனால் அவர் இப்படியே செய்யட்டும். அவரது செயல்பாடுகள் திமுக அரசுக்குத்தான் சிறப்பு சேர்க்கின்றன. எனவே அவர் இப்படியே செய்து கொண்டிருக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது:




ஒன்று இரண்டில்லை.. அனைத்து பிரச்சினையிலுமே ஆளுநர் பிரச்சனை செய்து கொண்டுதான் வருகிறார். அரசுக்கு எதிராகத்தான் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டரீதியாக என்ன நடவடிக்கை வேண்டுமோ. அதை எடுத்து வருகிறோம். உச்சநீதிமன்றத்திலும் நாம் தொடர்ந்த வழக்கில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு தான் சேர்கிறது. எனவே ஆளுநர் தொடர்ந்து அப்படியே செயல்பட்டு வரட்டும்.


பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை அளிக்க நாங்கள் தயாராக இல்லை. காரணம் பெரியார் எங்கள் தலைவர். எங்கள் தலைவருக்கெல்லாம் தலைவர்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து மொத்தமாக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய வருகின்றன.


வடசென்னை வளர்ச்சிக்காக ரூபாய் 1000 கோடியில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அடிக்கல் நாட்டு விழாவின்போது நான் வந்தேன். இப்பொழுது மீண்டும் வந்து ஆய்வு செய்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். நான் மேயராக இருந்த போதும் பின்னர் துணை முதல்வராக இருந்த போதும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளேன். ஓராண்டு காலத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்