சென்னை: தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிவிட்டு பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசிய போது தமிழர்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது என முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களவை கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என பேசியது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. இதனால் இவரின் பேச்சை கண்டித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் போர்க்கொடி ஏந்தி வருகின்றனர். அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தி திணிப்பு மற்றும் கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து நேற்றும் இன்றும் திமுக எம்பிக்கள் தொடர்ந்து கண்டனம் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்தியை ஏற்க மாட்டோம்.. மும்மொழிக் கொள்கை ஏற்கமாட்டோம்..மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தருவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமிராக பேசுகிறார். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக அளித்து முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!"
2025-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!"
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
"இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்" எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
{{comments.comment}}