சென்னை: சென்னையில் கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை முக்கிய கடமையாக கருதி வருகின்றனர். இவ்வாறாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் ஒரு நாள் முன்னர் வந்து தங்குவார்கள். அதன்பின்னர் விமான நிலையம் சென்று ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
இவர்களுக்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் சுமார் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.39.20 கோடியில் 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்காக கட்டப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று அடிக்கல் நாட்டி கட்டடப்பணியினை துங்கி வைத்தார். சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் ஹஜ் இல்லம் கட்டிட பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள். இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
பெண்களுக்கு பலம் தரும்.. கருப்பு உளுந்தங்கஞ்சி .. வரலாறு கூறும் சமையல் (பகுதி 4)
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
வலி!
மாறிக்கொண்டே இருப்பதும் மாறாதிருப்பதும் (The ever changing and UnChanging)
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
{{comments.comment}}