ஜி 20 மாநாடு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்... ஸ்பெஷல்!

Sep 07, 2023,10:10 AM IST
சென்னை: டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 9ஆம் தேதி டெல்லி செல்ல இருக்கிறார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் கலந்து கொள்கிறார். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவிலும், தெற்கு ஆசியாவிலும் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு இதுதான். தற்போது ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.



2023 ஜி20 உச்சி மாநாட்டில் 19 உலக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் ஒன்று கூடி உலகளாவிய நிதி நிலைமையை எப்படி கையாள்வது என்பது பற்றி விவாதிக்கப்படும். டெல்லி டி20 உச்சி மாநாட்டில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, கலாச்சாரம், பொருளாதாரம், வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல், காலநிலை, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறும்.

டெல்லி ஜி 20 உச்சி மாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் முடிவில் டி20 தலைவர்களின் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்படும். மாநாட்டையொட்டி சர்வதேச தலைவர்கள் மற்றும் உள்நாட்டு தலைவர்கள் பலரும் டெல்லி வர உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்திரபிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி நகரமே பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது . தலைவர்களுக்காக சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜி 20 உச்சி மாநாட்டிற்காக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள்   (8-10) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 10ஆம் தேதி வரை 207 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் யாரும் ரயில் நிலையத்திற்குள்  உள்ளே நுழையவோ வெளியே வரவும் அனுமதி கிடையாது.

சமீபத்திய செய்திகள்

news

ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போடக் கூடாது : ரயில்வே நிர்வாகம் அதிரடி

news

சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு? - சிறைத்துறை அதிரடி உத்தரவு

news

கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!

news

வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு

news

தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?

news

அகரத்தில் தொடங்கும் உலகம் - திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 1)

news

147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!

news

கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்