சென்னை: "நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என நடிகர் ரஜினிகாந்த்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். மற்ற முக்கிய பிரபலங்களும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் தனக்கென்று தனியான ரசிகர் கூட்டத்தை பெற்ற நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர். 3 தலைமுறை ரசிகர்களை பெற்ற ரஜினிகாந்த் பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் ரத்ததான முகாம், மருத்துவ முகாம், அன்னதானம், முதியோர்களுக்கு போர்வை வழங்குதல், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா வழங்குதல், கோவில்களில் பொங்கள் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை செய்து ரசிகர்கள் ரஜினிகாந்த் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் இணைய பக்கங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்தின் வீட்டிற்கு அவரை காண படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்:
முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், அன்பிற்கினி நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை:
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, பிஜேபி தமிழ்நாடு சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான ரஜினிகாந்த் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று பதிவி்டடுள்ளார்.
இசை அமைப்பாளர் அனிருத்
பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என இசை அமைப்பாளர் அனிருத் பதிவிட்டுள்ளார். ரஜினி நடிக்கும் சமீபத்திய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த்தின் மைத்துனர் ரவி ராகவேந்திராவின் மகன்தான் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா நீங்கள் தான் என் குரு... நீங்கள் தான் என் சந்தோஷம்... நீங்கள்தான் எல்லாமே ... எங்களை எப்போதும் கவர்ந்து கொண்டே இருங்கள். என இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}