ஆதரவு 125 .. எதிர்த்து 112.. ஆர்ஜேடி வெளிநடப்பு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் வெற்றி

Feb 12, 2024,06:21 PM IST

பாட்னா: பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவாக 125 பேரின் ஆதரவு கிடைத்தது. எதிர்த்து 112 வாக்குகள் பதிவாகின. முன்னதாக ராஷ்டிரிய ஜனதாதளம், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்புச் செய்தனர்.


பீகாரில் ஆர்ஜேடி கூட்டணியை உதறி விட்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார் நிதீஷ் குமார். இந்த நிலையில் பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் நிதீஷ் குமார். இதையடுத்து சூடான விவாதம் நடந்தது.




அதில் கலந்து கொண்டு பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உணர்ச்சிகரமாக பேசினார். நிதீஷ் குமாரை தந்தையாகத்தான் நினைக்கிறேன். இன்று தசரதனாக நிற்கிறார் நிதீஷ் குமார். தசரதன் தனது மகனை மட்டுமே காட்டுக்கு அனுப்பினார். ஆனால் நிதிஷ் குமாரோ, மொத்த பீகாரையும் காட்டுக்கு  அனுப்பியுள்ளார் என்றார்.


பின்னர் நிதீஷ்குமார் பதிலுரைக்குப் பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. அந்த சமயத்தில் ஆர்ஜேடி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர். இதனால் ஆளும் கட்சி மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இறுதியாக நடந்த வாக்கெடுப்பில் 125 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்து 112 வாக்குகள் விழுந்தன. இதனால் நிதீஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்