சிகாகோ: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோ கடற்கரைப் பகுதியில் ஹாயாக சைக்கிளிங் செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் இது. பல்வேறு தொழில் முதலீடுகள் குறித்த அறிவிப்புகளும் தினந்தோறும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தனது ஹெக்டிக்கான ஷெட்யூலுக்கு மத்தியிலும் தனது உடல் ஆரோக்கியம் தொடர்பான உடற்பயிற்சிகளிலும் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார்.

அமெரிக்கா போனதும் சான்பிரான்சிஸ்கோ நகரில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார் முதல்வர். இந்த நிலையில் தற்போது சிகாகோவில் முகாமிட்டுள்ள அவர் அங்கு கடற்கரைப் பகுதியில் சைக்கிளிங் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஜெர்க்கின் போட்டுக் கொண்டு, ஜாலியாக அவர் சைக்கிளிங் செய்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள முதல்வர், மாலை நேர அமைதி புதிய கனவுகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் என்று கேப்ஷனும் போட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவைப் பார்த்து முதல்வரைப் பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர்.
சிகாகோ பயணத்தில் முக்கிய அம்சமாக சென்னையில் ஈட்டன் நிறுவனம் ரூ. 200 கோடி மதிப்பில் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை விரிவாக்கப் போகும் அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் அஸ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் சர்வதேச மையம் இந்தியாவில், அதுவும் சென்னையில் அமையப் போகிறது என்ற செய்தியையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?
தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!
{{comments.comment}}