சென்னை: முதல்வர் சி ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை தொடர்ந்து சாதனைகளைக் குவித்து வருகிறது. இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். அதில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஒரு பெண் அமைச்சர் (கீர்த்தனா) இருக்கிறார். இந்த நிலையில் இன்று பதவியேற்கும் 3 பெண்களையும் சேர்த்து மொத்தம் 4 பெண் அமைச்சர்கள் விஜய் அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள். அதிக அளவிலான பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்த பெருமையும் முதல்வர் விஜய்க்குப் போகிறது.
இன்று பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்கள் விவரம்:
ஸ்ரீநாத் (தூத்துக்குடி), கமலி (அவிநாசி), சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்), ஆர்.வி. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்பகோணம்), ராஜீவ் (திருவாடானை), ராஜ்குமார் (கடலூர்), வி.காந்திராஜ் (அரக்கோணம்), மதன்ராஜா (ஒட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்தின் (சேலம் தெற்கு), ரமேஷ் (ஸ்ரீரங்கம்), பி.விஸ்வநாதன் (மேலூர்), ஆர் குமார் (வேளச்சேரி), கே. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்), வி.சம்பத்குமார் (கோவை வடக்கு), முகம்மது பர்வாஸ் (அறந்தாங்கி), சரத்குமார் (தாம்பரம்), மரிய வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்), கே. விக்னேஷ் (கிணத்துக்கடவு).
இதில் பி.விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு பிரமாண்ட பிரதநிதித்துவம்

சென்னை மாவட்டத்திற்கு மட்டும் மொத்தமாக 7 அமைச்சர்களைக் கொடுத்துள்ளார் முதல்வர் விஜய். இதுவரை இந்த அளவுக்கு அதிக அமைச்சர்கள் சென்னைக்குக் கிடைத்ததில்லை.
அதேபோல தவெக சார்பில் மட்டும் 6 பட்டியலின அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுக்க பரவலாக அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். அதேசமயம், தவெக வெல்லாத மாவட்டங்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
{{comments.comment}}