சென்னை: லொள்ளுசபா புகழ் காமெடி நடிகர் சேஷு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சென்னை காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.
"அய்யோ இவரா.. இவரு ரொம்ப பயங்கரமான ஆளாச்சே" என்ற வசனம் பேசி மிகப் பிரபலமானவர் சேஷு. நடிகர் சேஷு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். பின்னர் 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
2004 ஆம் ஆண்டு சின்னத்திரையில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவை தொடரில் நடித்து அசத்தியவர். இவர் நடித்த லொள்ளு சபா மற்றும் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவை தொடர் மக்களிடையே மிகப் பிரபலமாக வரவேற்பு பெற்றது.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது வெள்ளித்திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். குறிப்பாக வீராப்பு, வேலாயுதம், ஆண்டி இந்தியன், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் நடித்திருந்தார் காமெடி நடிகர் சேஷு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
சேஷு மீது நடிகர் சந்தானம் மரியாதை வைத்துள்ளதால் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர் .இவருடன் இணைந்து லொள்ளு சபாவில் நடித்த சந்தானம் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சேஷுவிற்கு சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேஷுவிற்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இவருடன் நடித்த நடிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என விரைவில் இவர் பூரண குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}