சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பெண்களை கவரும் விதத்தில் 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் தரப்பில் முதல் கட்டமாக 39 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட. அதில், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

சமீபத்தில் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. காலியாக உள்ள 30 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும், அரசு பணிக்கான தேர்வுத் தாள் கசிவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும். தொழிற் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்க தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பெண்களுக்காக 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மத்திய அரசின் புதிய பணி நியமனங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இடங்கள் வழங்கப்படும். மத்திய அரசின் கீழுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.
பெண்களின் உரிமைகள் குறித்தும், அவர்களின் வழக்குகளுக்கான போராட்டத்தில் உதவுவதற்கும் ஒரு மண்டல அதிகாரி நியமிக்கப்படுவார். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும் என்று கார்கே தெரிவித்துள்ளார்.
மோடியின் உத்தரவாதங்களுக்குப் போட்டியாக தற்போது காங்கிரஸும் உத்தரவாதங்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}