டெல்லி: ஜனநாயகத்தை காத்திட அனைவரும் தவறாது வாக்களிக்க முன்வர வேண்டும். இந்திய ஜனநாயகத்தையும், எதிர்கால தலைமுறையையும் காக்கும் தேர்தல் இது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. 18வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு புதுவை மற்றும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 39 தொகுதிகளில் இந்த வாக்கு பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிகளவில் வெயிலின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் 6 மணி முதலே வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட் பக்கத்தில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு. உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், வரும் தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை நினைவில் கொண்டு வாக்களிக்க முன்வர வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்கு என்ற தைலத்தைப் பூசி ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். வெறுப்பை தோற்கடித்து அன்பை விதைக்க அனைவரும் தவறாது வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}