பெங்களூரு: கன்னட சினிமா மூலம் வளர்ச்சி அடைந்துவிட்டு கன்னடர்களை அவமதிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னடப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் அவர் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அந்த மொழி ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நடித்தார். 2021ம் ஆண்டு சுல்தான் படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார். அதன்பின்னர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட்டடித்த நிலையில், சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான புஷ்பா 2 படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகவே மாறியது.
இந்நிலையில், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டு ராஷ்மிகாவை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. தனது வீடு ஐதராபாத்தில் இருப்பதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது என்பது தனக்கு தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாகவும், கன்னட சினிமா மூலம் வளர்ச்சி அடைந்துவிட்டு கன்னடர்களை அவமதிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.
இதனையடுத்து, ராஷ்மிகாவிற்கு எதிராக கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கி வருகின்றனர்.ரவி கனிகாவின் கருத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய இணை அமைச்சர் ராஜிவ் சந்திர சேகர் காங்கிரஸ் குண்டர் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார்.தங்கள் மண் சார்ந்து பேச தங்களுக்கு உரிமை உள்ளதாக ராஜிவ் சந்திர சேகருக்கு ரவி கனிகா பதிலளித்துள்ளார்.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}