விஜய்யைப் பார்த்து சீமான் பயப்படுகிறார்.. மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.. காங். எம்.பி. மாணிக்கம் தாகூர்

Nov 05, 2024,04:54 PM IST

சிவகாசி: புதிதாக கட்சி தொடங்குபவர்கள் ஆளுங்கட்சியை விமர்சித்து எதிர்ப்பு அரசியல் நடத்துவது வழக்கம்தான். அதைத்தான் தவெக தலைவர் விஜய் கையில் எடுத்துள்ளார். ஆனால் இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? மாட்டார்களா? என்பதை அவர்கள்தான் தான் முடிவு செய்வார்கள். ஆனால் விஜய்யைப் பார்த்து சீமான் பயப்படுகிறார் என்பது தெளிவாகி விட்டது என்று விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்த அவருக்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து வந்தார் சீமான். விஜய் நடத்திய மாநாட்டிற்கு பின்னர் அவரா இவர் என்று கூறும் அளவிற்கு, தம்பி தம்பி என்றவர், அண்ணாவது தம்பியாவது என்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலையில் விஜய்யை சீமான் விமர்சிப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், விருதுநகர் எம்பியுமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:


விஜய் வருகையால் இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்து விட்டதால் சீமான் விமர்சிக்கிறார். தனது ஆதரவாளர்கள் தன்னை விட்டு சென்று விடுவார்கள் என்ற கவலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வந்திருக்கலாம். விஜய்யின் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்து விடுவோம் என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே வாக்களித்துவிட்டு, மறுமுறை வேறொரு அரசியல் கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்காக பேசும் பேச்சாளராக சீமான் திகழ்கிறார்.




புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் ஆளும் கட்சியை விமர்சித்து எதிர்ப்பு அரசியல் நடத்துவது வழக்கம். அதை விஜய் கையில் எடுத்துள்ள நிலை அதனை ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். 


வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முக சாயலில் இருக்கும் பிரியங்கா காந்தி மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அவர் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் பக்க பலமாக இருப்பார். 


திமுக கொள்கைக்கும் நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள கட்சி கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட எச் ராஜாவின் அறியாமையை எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்