காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்.. உறுப்பினர் கட்டணம் உயர்வு, பிரியங்கா காந்திக்கு 'செக்'

Feb 22, 2023,09:58 AM IST
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் நிர்வாக விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த மாற்றங்கள் விதிமுறைகளாக மாறவுள்ளது. 



காங்கிரஸ் கட்சி தனது நிர்வாக நடைமுறைகளில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளது.  இதுதொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பல்வேறு சுற்றுக்களாக நடந்து வந்த ஆலோசனைகளின் தொடர்ச்சியாக இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. கட்சித் தொண்டர்களுக்கும், தலைமைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சட்டிஸ்கரில் நடைபெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்கு முன்னதாக இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளன.



இதன்படி, மாநில காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுக்கான வருடாந்திர கட்டணம் ரூ. 100 என்பதிலிருந்து ரூ. 1000 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதில் வளர்ச்சிக் கட்டணம் ரூ. 400 ஆகவும், கட்சி பத்திரிகையான சந்தேஷ் இதழுக்கு ரூ. 300ம் எடுத்துக் கொள்ளப்படும்.

மூத்த காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கான வருடாந்திர கட்டணம் ரூ. 3000 ஆக இருக்கும். இந்தக் கட்டண உயர்வின் மூலமாக கட்சியினர் தீவிர சிந்தனையுடன், ஆக்கப்பூர்வமாக செயல்பட வழி பிறக்கும் என கட்சி கருதுகிறது. மேலும் கட்சிக்கான நிதி நெருக்கடியும் குறையும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

காங்கிரஸ் காரியக் கமிட்டி தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இந்தப் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். காரணம், மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு இது என்பதால்.  இதிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், லோக்சபா ராஜ்யசபா கட்சித் தலைவர்கள் ஆகியோர் காரியக் கமிட்டிக்கு தாங்களாகவே தேர்வாகி விடுவார்கள். இவர்கள் தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை. 

மற்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் காரியக் கமிட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த பட்டியலில் பிரியங்கா காந்தி வத்ராவும் சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது அவர் தேர்தலில் போட்டியிட்டுத்தான் காரியக் கமிட்டிக்கு வர முடியும் என்று விதி மாற்றப்பட்டுள்ளது.  ஆனால் இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. தேர்தலில் பிரியங்கா போட்டியிட்டால் அவருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

மேலும் ஜாதிவாதிப் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  விரைவில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்