கவர்னர் பதவியை விமர்சித்த வெங்கடேசன்...பதிலடி கொடுத்த தமிழிசை செளந்தரராஜன்

Feb 22, 2023,11:23 AM IST
சென்னை : பாஜக தலைவர்கள் பலரும் பல மாநிலங்களுக்கு கவர்னர்களாக நியமிக்கப்படுவது பற்றி எம்.பி., வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்த தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை செளந்தரராஜன், ஒரு வேட்பாளராக நாங்கள் போட்டியிடும் போது எங்களின் தலைமை தகுதியை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அதனால் நாங்கள் எம்பி ஆகவில்லை. அது அவர்களின் தவறு கிடையாது.  



ஆனால் எங்களின் திறமையை பிரதம் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புரிந்து கொண்டு எங்களை கவர்னர்களாக நியமித்துள்ளனர். எங்களின் திறமைகளை வீணடிக்க அவர்கள் விரும்பவில்லை. இதில் தவறும் ஏதும் இல்லையே. எங்களின் நிர்வாக திறமையை தற்போது மக்களும் அங்கீகரித்துள்ளனர். மக்கள் எங்களை தோற்கடித்திருந்தாலும் பிரதம் எங்களின் திறமையை பார்த்தார் என கூறி இருந்தார்.


இந்த பேட்டியை குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த எம்.பி., வெங்கடேஷ், ராஜ்பவன் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலி சான்றிதழ் இல்லையா? என கேட்டிருந்தார்.

இதற்கு ட்விட்டர் மூலமே பதிலளித்த தமிழிசை, ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார்.... டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல...அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்... டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் - தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல.... 

தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது... ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்... அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே.... நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்...  நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்... இறுமாப்பு வேண்டாம்...

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்... அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை... மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம் என பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

news

சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!

news

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

news

கார்த்திகையில்!

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்