தென்னிந்தியர்கள்.. ஆப்பிரிக்கர்கள் போல இருக்காங்க.. சாம் பிட்ரோடா பேச்சால் சலசலப்பு!

May 08, 2024,06:36 PM IST

டெல்லி: தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக  பேசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா.


காங்கிரஸ் கட்சியின் அறிவு ஜீவி தலைவர்களில் ஒருவராக வர்ணிக்கப்படுபவர் சாம் பிட்ரோடா. ராஜீவ் காந்தி காலத்து தலைவர் இவர். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியைக் கொண்டு வந்த ராஜீவ் காந்தியின் கொள்கைக்குப் பின்னால் இருந்தவர். இப்போது அமெரிக்காவில் இருக்கும் சாம் பிட்ரோடா சமீப  காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.


இவரது பேச்சுக்கள் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வாரிசு வரி விதிப்பு  குறித்து அவர் பேசியிருந்தார். இதை பாஜக தனக்கு சாதகமாக மாற்றிப் பிரச்சாரத்திலும் பயன்படுத்தியது. இந்த நிலையில் இன வெறியைத் தூண்டும் வகையிலான கருத்தை வெளியிட்டுள்ளார் சாம் பிட்ரோடா. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




தி ஸ்டேட்ஸ்மேன் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், இந்தியா ஒரு மாறுபட்ட நாடு. இங்கு கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல இருப்பார்கள். மேற்கு இந்தியர்கள் அரேபியர்கள் போல இருப்பார்கள். வடக்கில் இருப்பவர்கள் வெள்ளையாக இருப்பார்கள். தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போல காணப்படுவார்கள் என்று கூறியிருந்தார் சாம் பிட்ரோடா.


இந்த கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில்,  இந்தியாவின் வேற்றுமையிலும் ஒற்றுமை குறித்து சாம் பிட்ரோடா கூறிய கருத்துக்கள் மிக மிக தவறானவை, ஏற்றுக் கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த கருத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. அதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியும் சாம் பிட்ரோடா கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஆகியோரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹிமந்தா  பிஸ்வாஸ் கூறுகையில், சாம், நான் கிழக்கிலிருந்து வருபவன். நான் இந்தியனாகத்தான் இருக்கிறேன். நாங்கள் வேறுபட்டு இருக்கலாம்.. ஆனால் ஒன்றாக இருக்கிறோம் என்று  கூறியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தும் சாம் பிட்ரோடாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 


ஆக மொத்தம் ஒன்னு மட்டும் தெளிவாப் புரியுது.. பொறுப்பான தலைவர்கள் பலரும், பொறுப்பில்லாமல்தான் தொடர்ந்து பேசிட்டிருக்காங்க..!

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்