உப்பு அல்லது சோடியம் குளோரைடு உடலுக்கு ரொம்ப முக்கியம். இது உடம்பில் தண்ணீரையும், நரம்பு மற்றும் தசைகளின் வேலையையும் சரியா வைக்குது. சாப்பாட்டுக்கு நல்ல சுவை கொடுக்குது. உணவை கெட்டுப் போகாம பாதுகாக்குது. ஆனா, அதிகமா உப்பு சாப்பிட்டா, அது கிட்னிக்கு ரொம்ப கஷ்டத்தைக் கொடுக்கும். உடம்புக்குப் பல பிரச்சினைகளை உண்டாக்கும்.

அதிகமா உப்பு சாப்பிட்டா ரத்த அழுத்தம் அதிகமாகும், உடம்பில் தண்ணிர் தங்கும், கிட்னி டேமேஜ் ஆகும் வாய்ப்பு இருக்கு, கிட்னியில் கல் உருவாகும், கிட்னியோட வேலை பாதிக்கப்படும், சிறுநீர்ல புரதம் போகும், ஏற்கனவே கிட்னி பிரச்சினை இருந்தா அது இன்னும் மோசமாகும்னு டாக்டர்கள் சொல்றாங்க. அதனால, உப்பு அளவா சாப்பிடுங்க. பதப்படுத்தின உணவுகளைத் தவிர்க்கவும். வீட்ல சமைச்ச உணவை சாப்பிடுறது நல்லது. குறிப்பாக ஊறுகாய், கருவாடு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருக்கிறவங்களுக்கு உப்பு அதிகமா சாப்பிட்டா கிட்னி சீக்கிரமா டேமேஜ் ஆகுமாம். உப்பு அதிகமா சாப்பிட்டா சிறுநீர்ல கால்சியம் அளவு அதிகமாகும். இது ஆக்சலேட் கூட சேர்ந்து கிட்னியில் கல்லை உருவாக்கும். அதனால உப்ப குறைச்சா கல் வராம தடுக்கலாம்.
கிட்னி உடம்புல சோடியம் அளவை சரியா வைக்கும். ஆனா, ரொம்ப நாளா அதிகமா உப்பு சாப்பிட்டா, கிட்னியால அதிகப்படியான சோடியத்தை வெளியேத்த முடியாது. ஏற்கனவே கிட்னி பிரச்சினை இருக்கிறவங்க அதிகமா உப்பு சாப்பிட்டா, வீக்கம், சோர்வு, மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் வரும். இதனால நோய கட்டுப்படுத்துறது கஷ்டமாகும்.
உப்பு ஒரு சின்ன பொருள் தான். ஆனா, கிட்னி வேலை செய்றதுல இதுக்கு பெரிய பங்கு இருக்கு. பதப்படுத்தின உணவுகளை குறைங்க. சாப்பாட்டுல அதிகமா உப்பு போடாதீங்க. வீட்ல சமைச்ச சாப்பாட்ட சாப்பிடுங்க. இது கிட்னியையும் உடம்பையும் பாதுகாக்கும்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}