மணமணக்கும் மட்டன் சுவையை மிஞ்சும் வெஜ் கோலா உருண்டை!

Jul 13, 2023,04:20 PM IST
- மீனா

கறி விருந்து என்றால், அதில் கோலா உருண்டைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. கோலா உருண்டை இருந்தால்தான்.. கூலா சாப்பிடுவாங்க பலரும்..  அப்படி ஒரு சுவையான மேட்டர்தான் மட்டன் கோலா உருண்டை.

இப்பொழுது எல்லாம் கோலா உருண்டை என்றால், மட்டனில் மட்டும் செய்வது கிடையாது. சிக்கன் கோலா உருண்டை, மீன் குழம்பு நண்டு கோலா உருண்டை என டிசைன் டிசைனாக செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. ஏகப்பட்ட கோலா உருண்டைகள் வந்து விட்டன.. அடுக்கிக் கொண்டே போகலாம்.



சரிங்க, இதெல்லாம் "நான் வெஜ்" பிரியர்கள் ரசிச்சு ருசித்து சாப்பிடுவார்கள். "நான்"... ப்யூர் "வெஜ்".. எனக்கும் கோலா உருண்டை கிடையாதா என்று "நீங்க" மனசுக்குள் கேட்பது எங்களுக்கும் கேட்கவே செய்கிறது..  அவசரப்படாதீங்க பாஸ்.. உங்களுக்காக தான் இந்த ரெசிபி.  வாங்க எப்படி வெஜிடேரியன் கோலா உருண்டை செய்யலாம்னு பார்ப்போம்.

இதற்கு தேவையானது ரொம்ப சிம்பிள் - வாழைக்காயும், இதனுடன் நம் சமையல் அறையில் உள்ள சில பொருட்களும் தான். 

இப்போது, எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். இரண்டு வாழைக்காய் மீடியம் சைஸில் எடுத்து அதை அரைவேக்காடு வேக வைத்து துருவி கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் பட்டை ஒரு சிறிய துண்டு, கிராம்பு இரண்டு, சோம்பு ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை இரண்டு டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் மூன்று, பச்சை மிளகாய் நம்முடைய காரத்திற்கு ஏற்ப மூன்று அல்லது நான்கு சேர்த்துக் கொள்ளலாம். 

இதனுடன் சின்ன வெங்காயம் நான்கு, கசகசா சிறிது, கடைசியாக வேகவைத்து துருவிய வாழைக்காயில் சிறிது எடுத்து இவற்றையெல்லாம் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை  மீதம் இருக்கும் துருவிய வாழைக்காய் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் பொறிப்பதற்கு ஏற்ப ஆயில் ஊற்றி அது சூடாக விட வேண்டும். அதன் பின்னர் பிசைந்து வைத்த வாழைக்காய் கலவையை தேவையான சைஸில் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 

எண்ணெய் சூடான உடன் அதில் நான்கு, ஐந்து என்று போட்டு பொரித்து எடுத்தால் நான் வெஜ் சுவையில் ஒரு வெஜ் கோலா உருண்டை ரெடி. இப்பொழுது வெஜ் பிரியர்களும் நான்வெஜ் சுவையில் வெஜ் கோலா உருண்டைகளை சுவைக்கலாம். 

மட்டன், சிக்கன் கறி கோலா உருண்டைகளை சாப்பிடுபவர்கள் இனி பார்த்து நாம் சாப்பிட முடியாது என்று ஏங்க வேண்டாம். நாமும் இனி இந்த மாதிரி கோலா உருண்டை செய்து சாப்பிடலாமே.

தேவையான பொருட்கள் குறித்து ஒரு ரிமைன்டர்

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2
பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், பொட்டுக்கடலை -தேவைக்கேற்ப
தேங்காய் துண்டுகள் மூன்று
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம் நான்கு
கசகசா சிறிது
எண்ணெய்

சமீபத்திய செய்திகள்

news

பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

news

என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

news

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு

news

cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்

news

இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!

news

தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

news

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!

news

வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்