சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுடில்லி,மஷாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று தீவரமாக பரவி வருகிறது. தினம் தினம் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்றைய நிலவரப்படி கொரோனா தொற்று 5,364 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் கடந்த 5ம் தேதி 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு கர்ப்பிணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}