சென்னை: கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் நேற்று 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் மொத்தம் இந்தியாவில் 5,364 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி நேற்று ஒரு நாளில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஐதராபாத்தில் வேலை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக சொந்த ஊர் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு கர்ப்பிணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!
கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}