குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Jul 24, 2025,02:19 PM IST

காஞ்சிபுரம்: கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில் தாய் அபிராமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய், அபிராமி தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.  விஜய் தனியார் வங்கியில் வேலை செய்து வந்ததால் குடும்பத்துடன் சென்னையை அடுத்த குன்றத்தூரில் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தனர். டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கும், அப்பகுதியில் பிரியாணி கடை வைத்துள்ள சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 


இந்த விவகாரம் அபிராமியின் கணவர் விஜய்க்கு தெரியவந்துள்ளது. இது குறித்து அபிராமியை விஜய் கண்டித்துள்ளார். இதனால் அபிராமிக்கு விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். இந்த கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தனது இரண்டு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்துள்ளார். இந்த சம்பத்தில் இரண்டு குழந்தைகளும் பலியாகினர். 




இந்த விவகாரம் அறிந்த கணவர் விஜய், அபிராமி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடி கண்டுபிடித்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து கள்ளக்காதலுக்காக மகன், மகளை கொலை செய்த வழக்கில் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!

news

ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?

news

பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

news

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

news

இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்