தொடர் சரிவில் தங்கம் விலை.. சூப்பர் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. ஆனா வெள்ளி ஏறுதே!

Jul 30, 2024,12:29 PM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.400 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்திருந்ததலும் இன்றைய வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.


கடந்த 18ம் தேதியில் இருந்த தங்கம் விலை கடந்த சனிக்கிழமையன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்திருந்த நிலையில் மீண்டும் குறைந்துள்ளது. வாரத்தின் இரண்டாம் வர்த்தக நாளான இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை  சவரனுக்கு இது வரை ரூ.3600 குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் நேற்று ரூ.400 குறைந்ததை அடுத்து இன்றும் சவரனக்கு ரூ.240 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.30 அதிகரித்து 6,385 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,080 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.63,850 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,38,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,965 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.55,720 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.69,650 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.6,96,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 6,895க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,335க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,910க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,895க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,895க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்த வெள்ளி நேற்று உயர்ந்திருந்தது.நேற்று மட்டும் இல்லை இன்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 காசுகள் குறைந்து ரூ.89 ஆக உள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 712 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.890 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.89,000 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.89.500 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!

news

எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!

news

காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!

news

பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்

news

அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!

news

ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி

news

தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு

news

திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்