- எஸ். மஞ்சு பார்கவி
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் என்பது நமது வாழ்வின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. தொழில்நுட்பம் ஒரு சிறந்த வேலைக்காரன், ஆனால் ஒரு மோசமான எஜமான் என்ற கூற்றுக்கு ஏற்ப, அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலேயே நமது வெற்றியும் பாதுகாப்பும் அடங்கியுள்ளது.
இன்டர்நெட் எனப்படும் இணையம் இன்று உலகத்தையே ஒரு சிறிய கிராமமாக மாற்றியுள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை நொடிப் பொழுதில் பரிமாறிக் கொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இது உதவுகிறது. கல்வி, மருத்துவம், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் இணையம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இணையம் பல நன்மைகளைத் தந்தாலும், அதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இணையத்தில் பதுங்கியிருக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் நமது தனிப்பட்ட தகவல்களைத் திருட வாய்ப்புள்ளது.

நமது நிழற்படங்கள், இருப்பிடம் மற்றும் வங்கி விவரங்களை சமூக வலைதளங்களில் பகிரும்போது அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே, "யார் எவர்?" என்று தெரியாமல் இணையத்தில் தகவல்களைப் பகிர்வது ஆபத்தானது.
கைபேசிகள் நமக்குத் திரைப்படங்கள் பார்க்கவும், இசை கேட்கவும், விளையாடவும் வசதிகளைத் தருகின்றன. ஆனால், இன்றைய தலைமுறையினர் இதற்குப் பெருமளவில் அடிமையாகி வருகின்றனர். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல, கைபேசியின் அதிகப்படியான பயன்பாடு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் என்பது மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இது ஒருவருடைய தூக்கத்தை மிக மோசமாகப் பாதிப்பதோடு கழுத்து மற்றும் முதுகுத் தசை நார்களில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியான திரை பயன்பாட்டால் கண்கள் சோர்வடைவதுடன், மனரீதியாக அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற சிக்கல்களும் உருவாகின்றன. மேலும், இது ஒரு நபரின் சிந்திக்கும் திறனைக் குறைத்து, அவர்களைச் சுறுசுறுப்பற்றவர்களாக மாற்றுகிறது. மிக முக்கியமாக, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களுக்கு இணையாக, ஸ்மார்ட்போன் அடிமைத்தனமும் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களின் நேரத்தை மட்டுமல்லாது, அவர்களின் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தையும் அழிக்கின்றன. மனிதர்களோடு நேரடியாகப் பேசுவதை விட, திரையோடு செலவிடும் நேரம் அதிகரிப்பது சமூக உறவுகளைப் பாதிக்கிறது.

தொழில்நுட்பத்தை நாம் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தினால் அது ஒரு 'வரம்'. அதே சமயம், நேரத்தை வீணடிக்கவும் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கவும் பயன்படுத்தினால் அதுவே நமக்கு ஒரு 'சாபமாக' முடியும்.
அன்பு தோழர்களே.. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள், ஆனால் அதற்கு அடிமையாகிவிடாதீர்கள். கைபேசி பயன்பாட்டைக் குறைத்து, வெளி உலகத்தைப் பாருங்கள். உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள்.
தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்துவோம். இணைய உலகில் பாதுகாப்பாக பயணித்து, அறிவார்ந்த சமூகமாக முன்னேறுவோம். என்ன செய்வோமா?
(கட்டுரையாளர் எஸ். மஞ்சு பார்கவி, ஆவடி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். 2004-ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2016 முதல் மாவட்ட கல்வித்துறை மற்றும் ஆசிரியர் சங்க அமைப்புகளிடம் இருந்து பெற்று வருகிறார். லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் வழங்கிய சிறந்த ஆசிரியை விருது செப்டம்பர் 2022ல் கிடைத்துள்ளது. தொழில்முறை சிறப்பு விருதினை சென்னை பட்னா ரோட்டரி கிளப், செப்டம்பர் 2023ல் வழங்கிக் கெளரவித்துள்ளது)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}