சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய கூடும் என்பதால் இன்று தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டானா புயல் எதிரொலியால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் அனேக இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேபோல் கோவை, ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகள் தண்ணீர் புகுந்தது. கள்ளக்குறிச்சி, தேனி, சேலம், ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.இது தவிர நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் கன மழையால் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
டானா புயல் நாளை கரையைக் கடக்கும்
இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவானது. இந்தப் புயல் நாளை கரையைக் கடக்கவுள்ளது. இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதிகள் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் முன்னதாக 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.
டானா புயல் தற்போது பாரதீப்புக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு, இன்று காலை வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசாவின் பூரி கடற்கரை மற்றும் சாகர் தீவு பகுதி இடையே அதிதீவிர புயலாக நாளை கரையை கடக்க இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு:
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விமான நிலையம் மூடல்:
டானா புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6:00 மணி முதல் மூடப்படுகிறது. இதைத்தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கம் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இயற்கை!
2026ம் ஆண்டு யாருக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான விரிவான ராசிப்பலன்
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
வங்கதேச மக்களுக்காக... 17 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கிய முன்னாள் பிரதமரின் மகன்!
போராட்டங்கள் பல.. இறுதியில் அழகான வெற்றி.. After the Struggle, I Shine !
ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone
ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN
{{comments.comment}}