நாகை மாவட்டத்தில் வெளுத்துக் கட்டிய கன மழை.. கோடியக்கரையில் 250 மி.மீ. விளாசியது

Nov 29, 2025,05:30 PM IST

சென்னை: நாகை மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் மிகப் பெரிய அளவில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோடியக்கரையில் 250 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் தமிழ்நாடு கடலோரத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


புயல் தற்போது தமிழ்நாடு கடலோரத்தில் தொடர்ந்து பயணிக்கவுள்ளது. இலங்கை கடற்பரப்பிலிருந்து அது நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.




இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  நாகப்பட்டனம், ராமநாதபுரம், புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. 


இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 250 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. வேதாரண்யம் 185.63, வேளாங்கண்ணி 133.64, திருப்பூண்டி 123.25, நாகப்பட்டினம் 116.96, தலைஞாயிறு 108.07. பாம்பன் 101.88, காரைக்கால் 97.19  என மழை பதிவாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்