சென்னை : ஃபெங்கல் புயல் கரையை கடக்க துவங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முழுவதுமாக கரையை கடக்க இன்னும் 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10.கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது வேகம் குறைந்து மணிக்கு 7கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் காற்றின் வேகம் குறைந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தற்போது மாமல்லபுரத்திற்கு 50 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 90 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு 60 கி.மீ., தொலைவிலும் உள்ளது. மேற்கு வட மேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருவதால் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

புயல் என்ற வலுவிலேயே கரையை கடக்கக் கூடிய ஃபெஞ்சல் புயலின் தலைப்பகுதி தரையை தொட்டு கரையை கடக்க துவங்கி உள்ளது. மையப்பகுதி முழுவதுமாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என்றும், அதன் வால் பகுதி கரையை கடக்க அரை மணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் கரையை கடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கல்பாக்கம், செய்யூர் பகுதிகளிலும் பலத்த காற்று வீச துவங்கி உள்ளது.
தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு வரை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
{{comments.comment}}