ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்

Nov 30, 2024,06:46 PM IST

சென்னை : வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயலின் திசை மாறுவதால் அது கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவான புயலுக்கு ஃபெஞ்சல் என பெயர் இடப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த இந்த புயல், பிறகு புயலாக மாறி தரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டிருந்தது. 



இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், தற்போது பலத்த காற்றும் வீசி வருகிறது. கடலில் புயல் இருக்கும் வரை சென்னையில் மிதமான மழை விட்டு விட்டு தொடரும். தற்போது புயல் மகாபலிபுரம்-கல்பாக்கம் கரையோரத்தில் உள்ளது. இது கல்பாக்கம்-செய்யூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயலில் நகரும் வேகம் குறைந்துள்ளதால் நாளை காலையே இது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கரையை கடக்கும் போது செய்யூரில் மழை கொட்டி தீர்க்கும். புதுச்சேரியிலும் கனமழை போன்ற பாதிப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.  காற்றின் வேகம் திசை மாறி வருவதால் புயல் நகரும் திசையில் மாறு ஏற்பட்டுள்ளதுடன், கரையை கடப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்